ETV Bharat / state

“சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” - மு.க.ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி!

DMK Electoral bond: சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என FUTURE GAMINGS நிறுவனத்திடம் இருந்து 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றது குறித்து எடப்பாடி பழினிசாமி மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.

DMK Electoral bond
DMK Electoral bond
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 8:06 PM IST

சென்னை: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிய நிதிகள் குறித்த புதிய தகவல்களை எஸ்பிஐ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய நிலையில், அதனை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக நிதிகளை பெற்று பாஜக முதலிடத்தை வகிக்கிறது. இந்நிலையில், திமுக மொத்தமாக 656.5 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.

அதிலும், குறிப்பாக லாட்டரி கிங் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் (FUTURE GAMINGS) நிறுவனத்திடம் இருந்து திமுக 509 கோடி ரூபாய் பெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிகம் நன்கொடை வழங்கியது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் எம்ஜிஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது. மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திரம்: ரூ.650 நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.