ETV Bharat / state

"காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் பார்த்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர்" - ஈபிஎஸ் தாக்கு! - Edappadi Palaniswami - EDAPPADI PALANISWAMI

Tiruvallur Prisoner Died Issue: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று திருவள்ளூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS Condemns To Tiruvallur Prisoner Died Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 6:21 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விகாரத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேதப் பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டும் என்று காவல் துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல் துறைக்குப் பிறப்பிக்குமாறும் இந்த விடியா அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்" என்று அரசுக்கு எதிரான தன்னுடைய கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுக் காற்று - 30 பேருக்கு மேல் வாந்தி, மயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.