ETV Bharat / state

சென்னை திருவான்மியூரிலுள்ள தொழிலதிபர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை.. - கட்டுமான நிறுவனத்தில் சோதனை

ED raids Chennai infrastructure firm and promoters: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாகக் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கெமிக்கல் நிறுவன தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

ed-raided-businessman-living-in-a-private-apartment-in-thiruvanmiyur-chennai
சென்னை திருவான்மியூரிலுள்ள தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 10:54 PM IST

சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச்.02) காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கெமிக்கல் நிறுவன தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீருவான்மியூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கார் ஒன்றில் மூன்று அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் (CRPF) வீரர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை முடிந்த பின்னரே முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; தமிழ்நாடு இடம் பெறாததற்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.