ETV Bharat / state

ஜாபர் சாதிக் சகோதரருக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல்! - Jaffer Sadiq brother ED Custody

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 8:55 PM IST

Jaffer Sadiq brother: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஜாபர் சாதிக்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது சலீமிடம், “அமலாக்கத்துறை காவலில் தங்களை எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டார்.

அதற்கு பதிலளித்த முகமது சலீம், தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும், நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களைப் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறைக் காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையைக் காண அனுமதிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் சகோதரருக்கு ஆகஸ்ட் 27 வரை நீதிமன்றக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.