ETV Bharat / state

மனையை உட்பிரிவு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! - trichy Surveyor arrested - TRICHY SURVEYOR ARRESTED

Trichy Surveyor arrested: திருச்சியில், மனையை உட்பிரிவு செய்து கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட கொட்டப்பட்டு சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொட்டப்பட்டு  சர்வேயர் முருகேசன்
கைது செய்யப்பட்ட கொட்டப்பட்டு சர்வேயர் முருகேசன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:41 PM IST

திருச்சி: திருச்சி சுப்ரமணியபுரம் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (59). சொந்தமாக மளிகை கடை நடத்தி வரும் இவர், கடந்த மாதம் கொட்டப்பட்டு கிராமத்தில் 1,200 சதுரஅடி கொண்ட மனையினை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மனையினை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

பட்டாவிற்கு விண்ணப்பித்து 1 மாத காலமாகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்துள்ளார். அதில், மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதி சர்வேயர் முருகேசன் (34) என்பவரை சந்திக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், முனியப்பன் முருகேசனைச் சந்தித்து பேசியுள்ளார்.

இதனையடுத்து, சர்வேயர் முருகேசன் முனியப்பனின் மனையினை ஆய்வு செய்துள்ளார். தொடர்ந்து, நிலத்தை உட்பிரிவு செய்து தர ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்துக் கொள்ளுமாறு முருகேசனிடம் கேட்டுள்ளார். அதன் பேரில் முருகேசன் ரூ.5,000 குறைத்துக் கொண்டு பத்தாயிரம் கொடுத்தால் தான் மனையை உட்பிரிவு செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினர், முனியப்பனிடமிருந்து சர்வேயர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை, கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சர்வேயர் முருகேசனை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், “திருச்சியில் நிலங்கள் உட்பிரிவு செய்வது தொடர்பாக, நில அளவையர்கள் பொதுமக்களிடம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தொகை என நிர்ணயம் செய்து, இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நிலஅளவையர்கள் யாரும் தொலைபேசியை எடுப்பதில்லை. இடைத்தரகர்களின் தொலைபேசிக்கு மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்” என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பலனளிக்காத போராட்டம்.. அன்று கூலிக்காக இன்று வேலைக்காக: மாஞ்சோலை படுகொலை நினைவு தினம் உணர்த்துவது என்ன? - Manjolai Labourers Massacre day

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.