சென்னை: மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், கோடை கால நீர் மோர் பந்தலை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திறந்து வைத்தார். இதில் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோரை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோவிடம் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடிகளிலும் செய்திருக்கிறது. ஒரு சில திட்டங்களை நிறைவேற்றாமல் போனதற்கு மத்திய அரசு நிதி வழங்காமல் போனதே காரணம்.
வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை. பாஜக கடந்த 10 ஆண்டின் தேர்தல் வாக்குறுதிகளை பற்றி பேசாமல் தோல்வி பயத்தால் மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தவறான ஒரு தேர்தல் பரப்புரையை செய்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளதால், திருச்சியில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கணவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு! - Interim Bail To Attend Father Rites