ETV Bharat / state

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Chennai Electric trains issue: கடற்கரை முதல் தாம்பரம் வரை இரு வழித்தடங்களிலும் இன்று மாலை 3.15 மணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இன்று கூடுதலாக 150 எம்டிசி பஸ்கள் இயக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 1:54 PM IST

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் இரண்டு வழித்தடங்களிலும், இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் மாநகரப் பேருந்துகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் தாம்பரம், கிண்டி, பல்லாவரம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கும் பேருந்துகளை விட இன்று கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த பேருந்து சேவையானது, பாரிமுனை முதல் கிண்டி, தாம்பரம் வரை இணைக்கும் வழித்தடங்களில் இயக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து சென்னை நகருக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைப் போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 3.30 வரை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலான 150 பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வண்டலூரில் இருந்து மாயமான 2 அனுமன் குரங்குகளில் ஒன்று பிடிபட்டது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.