ETV Bharat / state

அதிமுகவில் இணைகிறாரா பாடகர் மனோ? - உண்மை என்ன? - அதிமுகவின் இணையும் மனோ

Singer Mano in AIADMK: பாடகர் மனோ எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அத்தகவல் முற்றிலும் தவறானது என பாடகர் மனோ ஈடிவி பாரத் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறாரா பாடகர் மனோ

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 3:33 PM IST

சென்னை: முன்னணி பாடகரான மனோ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மதுர மரிக்கொழுந்து வாசம், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, இளையராஜா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கும் இவர், சிங்கார வேலன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து‌ 40 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இதற்காக பலரும் மனோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகர் மனோ, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாடகர்‌ மனோ அதிமுகவில் இணைய உள்ளதாக வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது முற்றிலும் தவறான தகவல் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தலுக்காக காத்திருக்கும் தங்கலான்.. பா.ரஞ்சித் கொடுத்த புதிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.