ETV Bharat / state

"வாகனத்தில் பார்த்துச் செல்லுமாறு கூறிய மருத்துவரை தாக்கிய மர்ம கும்பல்" - சாத்தான்குளத்தில் பரபரப்பு! - Doctor brutally attacked - DOCTOR BRUTALLY ATTACKED

Doctor attacked near Sathankulam: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பார்த்துச் செல்லுமாறு அறிவுரை கூறிய மருத்துவரை பின் தொடர்ந்து, மர்ம கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம கும்பல் விட்டுச்சென்ற கார், சாத்தான்குளம் காவல்நிலையம்
மர்ம கும்பல் விட்டுச்சென்ற கார், சாத்தான்குளம் காவல்நிலையம் (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 8:24 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அடுத்துள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ்(35) நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் புளியம்பட்டியில் உள்ள தனது கிளினிக்ருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பேய்குளம் பஜார் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காரில் வந்த மர்ம கும்பல், அவர் மீது காரை மோதுவது போல் வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சாலையில் சென்ற முதியவர் ஒருவரை மருத்துவர் பிரகாஷ் பார்த்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட காரில் சென்ற மர்ம கும்பல், தங்களைக் கூறியதாக நினைத்துக் கொண்டு மருத்துவரைப் பின்தொடர்ந்து சென்று, பழனியப்பபுரம் விலக்கு அருகே மருத்துவரை மடக்கிப் பிடித்து, மருத்துவர் பிரகாஷ் பயங்கரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதைத் தெரிந்த அந்த மர்ம கும்பல் அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

மேலும், மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மருத்துவர் பிரகாஷ் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவர் பிரகாஷ் உறவினர்கள் மர்ம கும்பல் நிறுத்திவிட்டுச் சென்ற காரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, மருத்துவர் பிரகாஷ் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த மருத்துவரைத் தாக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கம், வெள்ளி கொள்ளை.. தாம்பரம் அருகே பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.