சென்னை: சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் கைதாகி ஒராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு செல்ல உள்ள நிலையில், செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டு இருப்பது சென்டிமெண்டாக முதல்வரின் டெல்லி பயணமும் வெற்றி பெறப் போகிறது என்றார்.
மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது" - செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்ஷன்!
தொடர்ந்து பேசிய அவர், பாஜக எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்று பொய்யான வழக்குகளை ப்பதிவு செய்வதை விடுத்து திருந்த வேண்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார். அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்றும், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு தீவிரமாக பணியாற்றக் கூடிய அவரை உள்ளே வைத்துவிட்டால் ஏதாவது செய்யலாம் என நினைத்தார்கள் ஆனால் திமுக இந்தியா கூட்டணி 40/40 வெற்றி பெற்றது என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்