சென்னை: நீட் தேர்வை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் நேற்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. ஆ. ராசா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி '' நான் படித்த காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், பெயருக்கு பின்னால் பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் , அந்த ஊரிலேயே ஒரேவொரு பி.ஏ.தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது'' என்று பேசினார். ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சு சர்ச்சையானது. சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதி தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி விளக்கம்: இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; "குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது."
#NoMoreNEET
" குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு…<="" p>— rs bharathi (@rsbharathidmk) July 4, 2024
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.
“சனாதனம் படிக்க விடவில்லை. கோத்திரமும், குலப்பெருமையும் படிக்க வைக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினர் படிக்கவிடவில்லை. நாங்கள் படித்திருக்கும் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று தன்னை முன்னிறுத்திப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.
வழக்கம் போல் அவருடைய பேச்சைத் திரித்து சர்ச்சையாக்க ஊடகங்கள் முயல்கின்றன. அதில் இன்னொரு வரியைப் பிடித்துக் கொண்டு இப்போது தலைப்பில் போடுகிறார்கள்.
“இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது” என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். தன்னையொத்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் வளர்ச்சியை இப்படிச் சொல்லும் நோக்கம் அவருக்கில்லை என்பதைத் திராவிட இயக்கத்தை உளப்பூர்வமாகப் புரிந்தவர்கள் அறிவார்கள்.
ஆனால், உண்மையிலேயே அவர் சொன்ன செய்தி நடந்த ஒன்று தானே! நாய் டிகிரி வாங்கிய செய்தியை இவர்கள் படித்தார்களா, இல்லையா? கடந்த ஆண்டு ஊடகங்களில் வந்த செய்தி தானே இது! அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளோமோ வாங்கியதே! அது ஒரு செய்தி.
இதுபோல ஏராளமான நிகழ்வுகள் மேற்குலகில் உண்டு. போகிற போக்கில் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டிவிட்டுப் போகிறார். ஊடகங்கள் அதைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்ல வந்த ஆதிக்க எதிர்ப்புச் செய்தியை, கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி திரிக்கின்றன.
அவர் பேச வந்தது கல்வியை இழிவுபடுத்தவா? "ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது." என்று நீட் தேர்வையும், இத்தனைக் காலம் நம்மைப் படிக்கவிடாமல் செய்த ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதைத் திரித்து ஊடகங்கள் வெளியிடுவது அயோக்கியத்தனம் ஆகும்'' என தமது பதிவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரயிலில் பயணிகளுக்கு மயக்க காபி கொடுத்து கைவரிசை காட்டிய இளம்பெண் கைது!