சேலம்: தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள் நேரடியாக மக்களுக்கு எளிதில் சென்றடைய வசதியாக, மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திடத்தின் மூலமாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த கூட்டாத்துபட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் கலந்துகொண்டு மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன் காவல்துறையிடம் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “காரிப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து தலைமைக்கு தெரிந்தால் சிக்கலாகிவிடும். இதனால் உடனடியாக அனைத்து சட்ட விரோத மதுக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரையில் 67 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் மரணம் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இதுவரையில் சுமார் 24 நபர்களை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 நாட்களில் 10 கொலைகள்.. மதுரை மாநகரை உலுக்கும் சம்பவங்களில் இளஞ்சிறார்கள்? உளவியல் காரணம் என்ன?