சென்னை : சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாடு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராட்சத பலூனை பறக்கவிட்டு மாநாடு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செப்டம்பர் 17ம் தேதி மாலை 5 மணி அளவில், YMCA மைதானத்தில் திமுகவின் முப்பெரும் மற்றும் திமுக கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகி விட்டன. அதனை ஒட்டி பவள விழாவும் நடைபெறுகிறது. இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை விட வரும் 17ம் தேதி நடைபெற உள்ள விழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய வகையில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மா.சு. பதிலளித்தார்.
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "இது முழுக்க முழுக்க திமுகவின் முப்பெரும் விழா அனைத்து கட்சி நிகழ்ச்சி அல்ல" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது தொடர்பான கேள்விக்கு, "அதிமுக பங்கேற்பது நல்லது தான். நல்ல விஷயத்திற்கு சேர்ந்தால் நல்லது தான். அரசும் மது ஒழிப்பிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு முரசொலி பவள விழாவில் இதே மைதானத்தில் தான் கூட்டணி உருவாகியது. 2017 - 2024 வரை கூட்டணியில் எந்தவித பிசிறும் ஏற்படாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து வருகிறார்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
நந்தனம் YMCA மைதானத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா பந்தல் பணிகள் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதில் ராட்சத பலூன் ஒன்று பறக்க விடப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/Xb3HFwBbxQ
— Subramanian.Ma (@Subramanian_ma) September 10, 2024
இதையும் படிங்க : மகாவிஷ்ணு விவகாரம்: சைதாப்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ்! - mahavishnu controversy
அதேபோல், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, "விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்; அவர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால், கூட்டணி என்பது திமுகவோடு தான் அவர்கள் இருப்பார்கள். முதலமைச்சரும், திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதலமைச்சர்கள் விரும்புகிற மிகச்சிறந்த நண்பராக திருமாவளவன் உள்ளார். அவர் யாரை அழைத்தாலும் முதலமைச்சரை விட்டு எங்கேயும் போகமாட்டார்.
புதிதாக டாஸ்மா்க் கடை திறக்கப்படவில்லை. தற்காலிகமாக Fl2 என்ற பெயரில் நாகரிகமாக பார் உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர். அதையும் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Fl2 பாரில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் வந்தது குறித்த கேள்விக்கு, "டெக்ரேஷனுக்கு தகுந்தாற்போல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்க தான் செய்வார்கள். நீங்கள் (மதுபிரியர்கள்) எதற்கு அங்கே குடிக்க செல்கிறீர்கள்?" என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்