ETV Bharat / state

"ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்படும்!" - தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் அதிரடி

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் 361வது சட்டப்பிரிவு நீக்கப்படும் என அறிவித்தார்.

ஆளுநர்
ஆளுநர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:59 AM IST

Updated : Mar 20, 2024, 11:12 AM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது முதலாவது அறிவிப்பாகவே கூட்டாட்சி தொடர்பான அறிவிப்பு அமைந்தது.

  • மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
  • ஆளுநர்களின் நியமனத்தின் போது மாநில அரசுகள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
  • மாநில ஆளுநர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் 361வது சட்டப்பிரிவு நீக்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.
  • ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை.
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  • இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை.
  • தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும்.
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன்.
  • தேசியம் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்.
  • குடியுரிமை திருத்த சட்டம் 2019 ரத்து செய்யப்படும்.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஜிஎஸ்டி திருத்தம் செய்யப்படும்.
  • உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • பெட்ரோல் ரூ 75, டீசல் ரூ65 என கொண்டு வரப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.

உள்ளிட்ட அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Last Updated : Mar 20, 2024, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.