ETV Bharat / state

மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம்! - DMK PROTEST - DMK PROTEST

DMK PROTEST: பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத் துறைச் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

ANNA ARIVALAYAM
ANNA ARIVALAYAM (CREDIT -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 3:56 PM IST

சென்னை: இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும் - மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாகத் திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடைபெறவுள்ளது.

திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சார்பில் நாளை (ஜூலை 6) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் "மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்" நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் - திமுக வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி முன்னணியினர் - தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பாசிச ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அதிமுகவும், பாமகவும் தான் திமுகவுக்கு எதிரி" - ராமதாஸ் பேச்சு..! - Ramadoss Criticized DMK

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.