ETV Bharat / state

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முறையீடு என்ன? - நாடாளுமன்ற தேர்தல்

MP election seat distribution: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அதன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளுடன் சீட் பகிர்வு குறித்து பேச்சவார்த்தை நடத்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 3:29 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏபர்ல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இதில் இந்தியா கூட்டணியில் முக்கிய நிலை வகித்து வரும் திமுக, அவர்களின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.4) திமுக அதன் கூட்டணி கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று (பிப்.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கடந்த முறை கோவை மற்றும் மதுரை தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், கூடுதல் தொகுதிகளை இந்த முறை கேட்டுப் பெறுவது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமாக உள்ளது. எங்களது முடிவை கூட்டணி தலைமையிடம் கூறியுள்ளோம். முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் தொகுதி குறித்து உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

அதேபோல, மதிமுக உடன் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தேர்தல் குழு கூறியதாவது, "இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எங்களது கட்சி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை திமுகவிடம் கேட்டுள்ளோம்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும். ஆனால், எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று முடிவாகவில்லை. விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும்" என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.