தேனி: தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் 7வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ராதிகா என்பவரது கணவர் ராஜீவ். இவரும் திமுகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வாழையாத்துப்பட்டி, வலையப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்பட்டது.
இதனிடையே, இளைஞர்களை குறிவைத்து திமுக கவுன்சிலரின் கணவர் தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்ததை, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் தட்டி கேட்டபோது, தான் ஆளும் கட்சி கவுன்சிலரின் கணவர் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மது பிரியர்களுக்கு சைடிஷ் உடன் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும், இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜீவ் தரப்பில் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது
இதையும் படிங்க: தேனியில் நீளும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விவகாரம்.. மேலும் 3 இளைஞர்கள் அதிரடி கைது!