ETV Bharat / state

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்! என்ன காரணம்? - DMK alliance parties

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 3:32 PM IST

Tamil Nadu Governor tea party: சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு ஆளுநர் ரவி (கோப்புப்படம்)
தமிழ்நாடு ஆளுநர் ரவி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை; 'சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகின்றன.

அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம்'' என தனது எக்ஸ் பக்கத்தில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.