ETV Bharat / state

கள்ளக்குறிச்சி விவகாரம்; நாளை ஆளுநரை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்! - PREMALATHA VIJAYAKANTH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 7:58 PM IST

Updated : Jun 27, 2024, 8:05 PM IST

PREMALATHA VIJAYAKANTH TO VISIT R.N RAVI: கள்ளக்குறிச்சி விவாகாரத்தில் உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும், நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

EPS
பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிசாமி (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரணத்தை தடுக்கத் தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அடையாள கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அதிமுக இன்று மக்கள் பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. அதிமுக நடத்திவரும் அனைத்து போராட்டங்களையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சட்டப்பேரவையில் எவ்வாறு மக்கள் பிரச்சினை குறித்து குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால், அவர்களை பேசவிடாமல் திமுக அரசு புறக்கணிக்கிறது. இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்கு தான், அங்கு மக்கள் பிரச்சினையைப் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதம்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளை பேச விட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். அதற்கு திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது சரியா? நாடாளுமன்றத்திற்கு ஒரு நீதி? சட்டப்பேரவைக்கு ஒரு நீதியா?” என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “அவையை நடத்த விடாமல் தொடர்ந்து அதிமுகவினர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்வதாக நேற்றைக்கு முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், கடந்த காலங்களில் திமுகவினர் தான் அதிக அளவு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். சட்டப்பேரவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டையை கிழித்துக்கொண்டு வந்து விளம்பர தேடினாரே, அதுதான்.

கிழியாத சட்டையை கிழிஞ்ச சட்டையாக பத்திரிகை முன்பு காட்டியது தான் விளம்பரம். கடந்த சபாநாயகர் இருக்கையில் அமளியில் ஈடுபட்டு திமுகவினர் அமர்ந்தது தான் சட்டமன்ற விதிமீறல். நாளை தேமுதிக சார்பில் ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக” கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரேமலதா, “காலையில் எழுந்து குடிப்பவர்களை குடிகாரன் என்று சொல்லக்கூடாது என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். மனசாட்சி இருந்தால் தார்மீக அடிப்படையில் அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என்றார். மேலும், நாடாளுமன்றத்தில் கேன்டீனுக்கு தான் செல்லப் போகிறார்கள். அங்கு தான் அவர்கள் விவாதம் நடத்தப் போகிறார்கள், இதற்கு 40க்கு 40 என்று பெருமை பேசுகிறார்கள்.

மணல் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை, டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஆகையால் தான் போதைப் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி உள்ளனர். நாளை 12 மணி அளவில் தமிழக ஆளுநரைச் சந்திக்க உள்ளேன்.

எதற்கெடுத்தாலும் பணத்தை கொடுத்து வாயை அடைத்து விடுகிறார்கள். மக்கள் வறுமையில் உள்ளதால் அதனைப் பயன்படுத்தி கொள்கிறார்கள். 2026-ல் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்போம் என்பது உறுதி. திமுகவில் குஷ்பு இருக்கும்போது அவரை செருப்பால் அடித்து துரத்தினார்கள். இன்று அவர் தேசிய மகளிர் அணித் தலைவியாக கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார்.

இதுவரை முதலமைச்சர் ஏன் அங்கு செல்லவில்லை? எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொழுது எந்த பிரச்சினையாக இருந்தாலும் செல்பவர் தற்போது ஏன் செல்லவில்லை? விக்கிரவாண்டி தேர்தல் அதிமுக, தேமுதிக புறக்கணிக்க காரணம், ஈரோடு தேர்தலில் மக்களை ஆட்டு மந்தைகளாக அடைத்து வைத்திருந்தார்கள். ஆகையால் தான் அதனை புறக்கணித்தோம்.

எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த உரிய அனுமதி அளிக்காமல் போராட்டம் நடத்துவதற்கு 23 வகையான கண்டிஷன் போட்டு இருக்கிறார்கள். 2026இல் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்போம்” என்றார்.

இதையும் படிங்க: திமுகவின் முக்கியப் புள்ளிகளை சிபிசிஐடி எவ்வாறு விசாரிக்கும்? - எடப்பாடி பழனிசாமி விளாசல்!

Last Updated : Jun 27, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.