ETV Bharat / state

தீபாவளி பட்டாசை உங்க குழந்தைங்க பாதுகாப்பா வெடிப்பது எப்படி? சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் இதோ! - FIRE CRACKERS ACCIDENTS PRECAUTIONS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

வான வெடி
வான வெடி (Credits- ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 8:03 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயம் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். பொதுவாக இந்த பண்டிகை காலத்தில் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுற்றுசூழல் பாதிப்பிற்கு ஒவ்வாெருவம் பொறுப்பாகும்” என கூறி பொது மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாடுவதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "தீபாவளி புதிய ரக பட்டாசுகள் விற்பனை அதிகரிப்பு".. சிவகாசி வியாபாரிகள் மகிழ்ச்சி!

செய்ய கூடியவை:

  1. திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றிலும் எரியக்கூடிய அல்லது எளிதில் தீபற்றக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. பட்டாசுகளை சேமித்து வைக்கும் போது எளிதில் தீபற்ற கூடிய பொருட்களிலிருந்தும் அவற்றை விலக்கி வைக்கவும்.
  3. பட்டாசு வெடிக்கும் பொது தளர்வான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
  4. குழந்தைகள் பெற்றோர் முன்னிலையில் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  5. சுவாச பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
  6. பட்டாசுகளை வெடிக்கும்போது, ​​பட்டாசுகளிடம் இருந்து தூரத்தில் நிற்கவும்.
  7. தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வை தயார் நிலையில் வைக்கவும்.
  8. வாளி தண்ணீரில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை போட வேண்டும். இதன் மூலம் பயன்படுத்திய பட்டாசுகளால் கால்களில் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
  9. பட்டாசு கொளுத்தும்போது செருப்பு அணியுங்கள்.
  10. பட்டாசுகளைக் கையாண்ட பிறகு ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ
    வேண்டும்.

செய்யகூடாதவை:

  1. பட்டாசுகளை கையால் கொளுத்தி போட வேண்டாம்.
  2. மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை எரியும் இடத்தில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.
  3. மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
  4. பாதி எரிந்த பட்டாசுகளை வீசாதீர்கள், அவை எரியக்கூடிய பொருளின் மீது விழுந்து தீயை மூட்டலாம்.
  5. பட்டு மற்றும் செயற்கை துணிகளை அணிய வேண்டாம்.
  6. எந்த ஒரு வாகனத்திலும் பட்டாசுகளை வெடிக்க முயற்சிக்காதீர்கள்.
  7. சானிடைசரை நெருப்புக்கு அருகில் வைக்க வேண்டாம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.