ETV Bharat / state

அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! - jagathratchagan - JAGATHRATCHAGAN

DMK MP JAGATHRATCHAGAN: திமுக மூத்த நிர்வாகியும், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு, அமலாக்கத்துறை சுமார் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன்(மைக்கில் பேசுபவர்)
ஜெகத்ரட்சகன்(மைக்கில் பேசுபவர்) (Credit - @Jagathofficial)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 4:51 PM IST

Updated : Aug 28, 2024, 10:24 PM IST

சென்னை: சிங்கப்பூர் நாட்டை மையமாகக் கொண்ட தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.32.69 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார். இதில் 45 லட்சம் பங்குகள் தனது மனைவி பெயருக்கும், 22.5 லட்சம் பங்குகளை மகள் பெயருக்கும், 2.5 லட்சம் பங்குகளை மகன் பெயருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் மாற்றியுள்ளார்.

மேலும், சிங்கப்பூர் நிறுவனங்கள் மூலம் ரூ.42 கோடியும், இலங்கை நிறுவனத்தில் ரூ.9 கோடியும் முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக செய்ததாகவும், இதற்கு உரிய விளக்கம் அளிக்கக் கோரியும் அமலாக்கத்துறை கடந்த 2022ஆம் ஆண்டு நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்தது.

இவ்வாறு அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே அமலாக்கத்துறையினர் இந்த நோட்டீசை பிறப்பித்து உள்ளதாகவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி கடந்த ஆண்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தனி நீதிபதி உத்தரவை மீறி மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. ஆனால், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கை தொடங்கலாம் எனக் கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான முடக்கம் செய்த 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு உள்ளதாகவும், அதேபோல் கடந்த ஆகஸ்ட் 26 அன்று உத்தரவிட்ட தீர்ப்பின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஒவ்வொரு விதிமுறைகளுக்கும் 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி வழக்கில் இனி அவகாசம் கோரக்கூடாது" - நீதிபதிகள் அறிவுறுத்தல்!

Last Updated : Aug 28, 2024, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.