ETV Bharat / state

ஜாபர் சாதிக் விவகாரம்: மத்திய போதைப் பொருள் அதிகாரிகளுக்கு இயக்குநர் அமீர் கடிதம்! - Narcotics Control Bureau - NARCOTICS CONTROL BUREAU

Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (ஏப்ரல் 01) மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இயக்குநர் அமீர் இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

Director Ameer
Director Ameer
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 8:31 PM IST

சென்னை: டெல்லியில் சுமார் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட 5 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஈட்டிய வருவாயை வைத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளதால் அவர் மேற்கொள்ளும் தொழில்களில் யாரெல்லாம் ஜாபர் சாதிக்கிடம் மிகவும் நெருக்கமாக உள்ளவர்களை அதிகாரிகள் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜாபர் சாதிக் உடன் இணைந்து ஓட்டல் நடத்தி வந்த நடிகரும் இயக்குநருமான அமீருக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (மார்ச் 31) சமன் அனூப்பிருந்தனர். அதில் ஏப்ரல் 2 தேதி செவ்வாய்க்கிழமை டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல் அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகிய இருவருக்கும் சமன் அனுப்பப்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி விசாரணை ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில், அப்துல் பாசித் புகாரி மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் அப்துல் பாசித் புகாரி வெளிநாட்டில் இருப்பதாகவும் இயக்குநர் அமீர் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராகுவதாகவும் குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்காத பட்சத்தில் நாளை (ஏப்ரல் 2) இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "அடடா மழைடா அட மழைடா" - ஏப்.11-ல் ரீ ரிலீசாகும் 'பையா' திரைப்படம்! - Paiyaa Movie Re Release

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.