ETV Bharat / state

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்.. - Dialysis treatment - DIALYSIS TREATMENT

Jayankondam Govt Hospital Dialysis treatment Started: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவு
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவு (Credits ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 4:06 PM IST

அரியலூர்: தமிழ்நாட்டின் சிமெண்ட் சிட்டி (Cement city) என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு 24 மணி நேரப் பிரசவ வார்டு, ரத்த வங்கி, எச்ஐவி பரிசோதனை மையம், உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.

காரணம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருப்பதால் இங்குள்ள பெரும்பாலான பொதுமக்களுக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டயாலிசிஸ் பிரிவினை மருத்துவ அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி தலைமை தாங்கினார். உடையார்பாளையம் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர்கள் ராஜவன்னியன், செந்தில்குமார் மற்றும் தலைமை செவிலியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆலோசகர் முருகானந்தம் மற்றும் மருத்துவ குழுவினர்கள் மருத்துவ பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அரசு மருத்துவர் டாக்டர் மதியழகன் நன்றி கூறினார்.

இது குறித்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பானுமதி கூறுகையில்," மூன்று புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் சுமார் 50 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று இருக்கைகளில், இரண்டு ஷிப்டுகளில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க உள்ளோம்

மேலும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு இனி வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.