ETV Bharat / state

“குடிநீர் பிரச்னையைத் தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும்” - பாமக எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் மனு! - PMK MLA to ECI - PMK MLA TO ECI

Dharmapuri and Mettur MP: மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

பாமக எம்பிகள் தேர்தல் ஆணையத்தில் மனு
குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் (Photo Credits - ETV Bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 10:16 PM IST

சென்னை: குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியை இன்று (மே.02) சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மக்களின் குடிநீர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தலைமைச் செயலாளரை சந்தித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறுகையில், “பருவமழை பொய்த்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டதால் குடிநீருக்கு மட்டுமின்றி, மற்ற பயன்பாட்டிற்கும் நீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ள தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை காலதாமதம் ஏற்படாமல் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அவரைத் தொடந்து பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், “மேட்டூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தினோம். தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி பூட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை, மக்கள் நலன் கருதி திறக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியிலிருந்து மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்யவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சதாசிவம் எம்எல்ஏ தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பாஜகவே காரணம்” - செல்வப்பெருந்தகை சாடல்! - Congress Selvaperunthagai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.