ETV Bharat / state

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: தீர்ப்பு நாள் வெளியானது?

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார்.

dhanush aishwarya rajinikanth
தனுஷ் - ஐஸ்வர்யா (dhanush aishwarya rajinikanth Instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜரான நிலையில், நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர்.

நீதிமன்றத்திற்கு வந்த நடிகர் தனுஷ்
நீதிமன்றத்திற்கு வந்த நடிகர் தனுஷ் (ETV Bharat Tamil Nadu)

மேலும், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். தற்போது இதுதொடர்பான வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து பாசிஸ்ட் மோனிகா டே விவாகரத்து அறிவிப்பு - யார் இவர்?

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இதுவரை 2 முறை அவகாசம் வழங்கப்பட்டும் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நீதிமன்றத்திற்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இன்று (நவ.21) காலை தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் தனித்தனியாக வந்து குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். ஆஜரான இருவரிடமும் நீதிமன்ற கதவுகள் சாத்தப்பட்டு ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களிடம் ஏன் இருவரும் பிரிந்து வாழ விரும்புகிறீர்கள்? சேர்ந்து வாழ முயற்சி செய்யலாமே? குழந்தைகள் இருப்பதால் சேர்ந்து வாழ்வது குறித்து மறுபரிசீலனை செய்யலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆனால், இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருவதால், விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும், சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதையடுத்து, தனுஷ் - ஐஸ்வர்யா இடையேயான விவாகரத்து வழக்கின் தீர்ப்பை நவம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.