ETV Bharat / state

திருச்செந்தூர் கடலில் மணல் குளியல் எடுக்கும் பக்தர்கள்.. அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? - tiruchendur sand bath

Tiruchendur sand bath: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த குடும்பத்துடன் சூரிய குளியல் மற்றும் மணல் குளியல் எடுத்து வருகின்றனர்.

Tiruchendur beach Image
திருச்செந்தூர் கடற்கரை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 10:42 AM IST

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

மணல் குளியல் எடுக்கும் பக்தர்கள் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், உடலில் கடற்கரை மணலை எடுத்து பூசியும், கடற்கரை மணலில் உடல்களை புகுத்தியும் சில மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் இருந்து பின்னர் கடலில் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.

இது பற்றி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரமணா கூறுகையில், "கடலில் குளிப்பதால் உடலில் நச்சுத்தன்மை நீங்கி பல்வேறு நோய்கள் குணமாவதாக தெரிவித்தார்.

கோவா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகமான செலவுகள் செய்து மிகப் பெரிய கடற்கரையில் பொதுமக்கள் சூரிய குளியல் மற்றும் மணல் குளியல் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்று ஆன்மீக சுற்றுலா வந்து திருச்செந்தூர் கடலில் சூரிய குளியல், மணல் குளியல் இடுவது குறைவான செலவில் அறிவியல் பூர்வமாகவும், மருத்துவபூர்வமாகவும் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உப்புக்காரத்தன்மை கொண்ட கடலில் நீண்ட நேரம் குளிப்பதனால் உடலில் பல்வேறு தோல் நோய்கள் நீங்கும் என்றார். மேலும் மணல் சூரிய குளியல் குளிப்பதால் எலும்புகள் வலுப்பெற்று, உடல் உஷ்ணம், மன அழுத்தம் குறைவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தவாறு செல்ஃபோனில் வீடியோ கேம் விளையாடுவதால் மனதளவில் பாதிக்கப்படுவதை தவிர்க்க, இதுபோன்ற கடற்கரை பகுதிகளில் மணல் குளியலிட்டு விளையாடி மகிழ்வதால் குழந்தைகள் மனதளவிலிலும் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவார்கள்" எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி: கடலில் குளிக்கச் சென்ற இளைஞர், 5 வயது சிறுமி உயிரிழப்பு! - two people died in sea

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.