ETV Bharat / state

திட்டமிட்டே மோசடி நடந்ததா? தேவநாதன் யாதவ் வழக்கில் முக்கிய திருப்பம்! - DEVANATHAN YADAV CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 3:26 PM IST

DEVANATHAN YADAV CASE UPDATE: முதலீட்டாளர்கள் மோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தேவநாதன் திட்டமிட்டே தன்னுடைய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களை நிதி நிறுவன இயக்குனர்களாக நியமித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப் படம்
தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குனர் தேவநாதனை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று (ஆகஸ்ட் 27 ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதன் அடிப்படையில், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், புகார்களின் அடிப்படையில் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவநாதன் 500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் மோசடி செய்த பணத்தில் பினாமிகள் பேரில், எந்த ஊர்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார், வேறு என்னென்ன தொழில்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பினாமிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேவநாதன் குடும்பத்தினரின் பெயரில் வேறு தொழில்களில் பண முதலீடு செய்துள்ளாரா? முதலீடுகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைத்திருகின்றனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மோசடி செய்வதற்காக திட்டமிட்டே தன்னுடைய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை இயக்குனர்களாக தேவநாதன் நியமித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு மாத சம்பளம் அல்லது மதிப்பூதியம் எவ்வளவு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நிதி நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்த தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் குணசீலன், மகிமை நாதனிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாஜக நிா்வாகியை அலுவலகம் புகுந்த வெட்டிய கும்பல்..இந்து மக்கள் கட்சி முன்னாள் நிர்வாகியிடம் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.