கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துமனைகளியில் 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று காலை வரை கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக இருந்த நிலையில் சற்று முன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில், 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூவர் கைது: கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா , அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் கண்டனம்: கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இனி இதுபோன்று நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பூதாகரமாகும் நீட் தேர்வு விவகாரம்; சென்னையில் ஜூன் 24 இல் திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!