ETV Bharat / state

சூட்கேஸில் கட்டுக்கட்டாக ரூ.1.11 கோடி.. சென்னையில் சிக்கிய கடத்தல் குருவிகள் - திடுக்கிடும் பின்னணி - foreign currency seized - FOREIGN CURRENCY SEIZED

Foreign Currency Seized: சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து கடத்த முயன்ற ரூ.1.11 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்)
சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 1:33 PM IST

சென்னை: சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் 'தாய் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், புறப்படத் தயாராகி கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு செல்வதற்காக வந்தனர். அவர்களை சோதித்ததில், இருவர் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இருவரையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில், இருவரும் பெருமளவு ஹவாலா பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இருவரின் சூட்கேஸ்களுக்கும் ரகசியமாக கட்டுக்கட்டாக ரூ.1.11 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணங்களைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் இரண்டு பயணிகளும், ஹவாலா பணத்தை வெளிநாட்டிற்குக் கடத்துவது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் கடத்தல் குருவிகள் என்றும், இந்த ஹவாலா பணத்தை, இவர்களிடம் வேறு யாரோ ஒருவர், கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கொடுத்து அனுப்பிய மர்ம ஆசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதைபோல், ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக, இந்தியாவுக்கு கடத்திவர இவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.1.11 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரவுடிகளின் பட்டியலை கேட்ட சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்.. அலறப் போகும் ரவுடிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.