ETV Bharat / state

கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைப் பெண் காவலர் தற்கொலை! - Ariyalur woman Police suicide - ARIYALUR WOMAN POLICE SUICIDE

Woman Police suicide: அரியலூர் காட்டகரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில், தலைமைப் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் காட்டகரம் அருகே வீட்டில் யாரும் இல்லாதபோது தலைமை பெண் காவலர் தற்கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:34 PM IST

அரியலூர்: கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யகலா (38). இவர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நந்தகோபால கிருஷ்ணன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்ட காரணத்தினால், அரியலூர் மாவட்டம் காட்டகரம் கீழத் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில், சத்தியகலா தன் மகனுடன் வசித்து வந்தார்.

இதனிடைய, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, சத்யகலா தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சத்தியகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வரதட்சனை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது! - Dowry Abuse Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.