ETV Bharat / state

சூடுபிடித்த தீபாவளி பர்ச்சேஸ்.. தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதற்காக சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

தி நகரில் வருகை புரிந்த மக்கள் கூட்டம்
தி நகரில் வருகை புரிந்த மக்கள் கூட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால், புத்தாடைகள் வாங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் முக்கிய கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில், சென்னை தி-நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.

குறிப்பாக, சென்னை தி-நகரில் இருக்கக்கூடிய ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை காட்டிலும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக காலை முதல் பஜார் வீதிகளில் திரள தொடங்கியுள்ளனர். இதனால், ரங்கநாதர் தெருவில் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மக்கள் கூட்டம்: பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விதவிதமான டிசைன்களில் ஆடைகள் வந்துள்ளன. பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். சாலையோர கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு விழிப்புணர்வையும் போலீசார் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்.

இதையும் படிங்க: தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு; காலை, மாலை எந்த நேரத்தில் வெடி வெடிக்கலாம்?

கூட்டத்தை கண்காணிப்பதற்காக காவல்துறை தரப்பிலிருந்து 5 உயர் கோபுரங்கள் ரங்கநாதன் தெருவில் பொருத்தப்பட்டுள்ளன. முன்னதாக, இப்பகுதியில் நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 புதிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 150 காவலர்கள் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தி.நகரில் புத்தாடை வாங்க வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் கூறுகையில், “தீபாவளி பண்டிகைக்காக எங்களுடைய குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்குவதற்காக வந்துள்ளோம். புதுவிதமான ஆடைகள் தற்போது அதிகளவில் வந்துள்ளன. சில கடைகளில் விலை கூடுதலாகும், சில கடைகளில் குறைவாகவும் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகைக்கு ரூ.25 ஆயிரம் ஒதுக்கியுள்ளோம். புதிதாக வந்திருக்கக் கூடிய உடைகளில் பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஆண்களுக்கு எதிர் பார்த்த அளவில் இல்லை” என்றார்.

தொடர்ந்து, சேலத்தைச் சேர்ந்த சூர்யா பேசுகையில், “சேலத்தில் இருந்து காலையில் வந்தோம். இன்னும் வாங்க வேண்டியது பொருள்கள் நிறைய உள்ளது. தீபாவளி வருவதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தற்போது வந்துள்ளோம். தீபாவளியை ஒட்டிய நாட்களில் பொருள்கள் தரமாக கிடைக்காது. அதுபோல பொருட்களின் விலையை அதிகமாக விற்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷ்யாமளா கூறுகையில், “குரோம்பேட்டையில் நிறைய கடைகள் உள்ளன. ஆனால், இங்கிருக்கும் வசதி அங்கு இல்லை. இங்கு ஒரு கடையில் துணி பிடிக்கவில்லை என்றால் பக்கத்து கடைக்கு செல்லலாம். ஆனால், அங்கு அவ்வாறு இல்லை. கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை கூட்டம் அதிகமாக உள்ளது. துணியின் வகைகள் அதிகமாக இங்கு உள்ளதால் அங்கிருந்து நாங்கள் இங்கே வருகிறோம். இந்த வருட தீபாவளிக்கு ரூ.8 ஆயிரம் ஒதுக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.