ETV Bharat / state

புதுச்சேரி விஷவாயு தாக்குதல்; உயிரிழந்த சிறுமிக்கு தங்க மூக்குத்தி அணிந்த பாட்டி.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்! - Poisonous Gas Attack In Puducherry - POISONOUS GAS ATTACK IN PUDUCHERRY

Puducherry Poisonous Gas Attack: புதுச்சேரியில் விஷவாயு தாக்கப்பட்டு உயிரிழந்த 15 வயது மாணவி உள்பட மூன்று பெண்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 9:14 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு, அப்பகுதியில் இருந்த வீடுகளில் கழிவறை வாயிலாக வெளியேறி, கழிவறைகளை பயன்படுத்திக் கொண்டிருந்த ஐந்து பேர் விஷவாயுவால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை மீட்ட உறவினர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதில், செல்வராணி (15), செந்தாமரை (85) மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், பாலகிருஷ்ணன் (70) மற்றும் பாக்கியலட்சுமி (30) ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுமி செல்வராணியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை முடிந்து, இறுதிச் சடங்குகளுக்காக அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அங்கிருந்த மாணவி செல்வராணியின் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், உயிரிழந்த மாணவிக்கு பிடித்தமான மஞ்சள் நிற ஆடையை அணிவித்தும், அவரது பாட்டி தனது பேத்திக்கு தங்கத்தாலான மூக்குத்தியை அணிவித்து அழகு பார்த்தது, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கண்கலங்கச் செய்தது. பின்னர், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் அவரது வீட்டின் வெளியே வைக்கப்பட்டது.

இதனிடையே, சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல், உயிரிழந்த மற்ற இருவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவர்களது உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

இதையும் படிங்க: உள்பக்கம் தாழிடப்பட்ட வீட்டில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த திமுக நிர்வாகி; கும்பகோணத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.