ETV Bharat / state

"சாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் அலுவலகம் திறந்தே இருக்கும்" - நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவிப்பு! - cpi office attack issue

Nellai CPI Office attack: சாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிபிஎம் மாவட்ட செயலாளர் பதிவு
சிபிஎம் மாவட்ட செயலாளர் பதிவு (Credit - Thinakaran Rajamani X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 1:52 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சார்ந்தவர் உதய தட்சாயினி (23). எம்.காம் பட்டதாரியான இவர், பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சார்ந்த மதன் குமார் (28) என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருநெல்வேலி, ரெட்டையார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மதன் மற்றும் உதய தாட்சாயினி இருவருக்கும் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு உள்ள லெனின் சிலை முன்பு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில், இச்சம்பவத்தை அறிந்த பெண்ணின் வீட்டார், நேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தாய் சரஸ்வதி மற்றும் சகோதரர் சரவணன் குமார் உட்பட 13 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் வயது மூப்பு காரணமாக இரண்டு பேரை போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி: இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் சாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம்: இந்நிலையில் "சாதி மறுப்பு திருமணத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்" என திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "நான் M.Com படிச்சிருக்கேன். அடுத்து Law படிக்கனும் - ஆசை அண்ணே! நாங்க ஆறுவருசமா காதலிக்கிறோம். அவரை எனக்கு பிடிச்சுருக்கு, அவரும் படிச்சிருக்காரு நா செஞ்சது என்ன தப்பு, எங்களை பிரிச்சுருவாங்களா..என்னா? நேற்று தான் அந்த பெண்ணை முதன்முதலாக சந்திக்கிறேன். கண்ணீர் பொங்க பேசினாள்.

சாட்சி கையெழுத்திட உறவினர் வேண்டும் என்கிறது பதிவுத்துறை. நாங்கதான் உறவு தைரியமாக இருங்கள் பார்த்துக் கொள்கிறோம். இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு வெளியே சென்றிருந்தேன். சாதி பித்து பிடித்தவர்கள் எங்கள் அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.

எங்கள் தோழர்களை இரத்தம் சொட்ட சொட்ட தாக்கியுள்ளனர். பாதுகாப்பிற்கு காவல் துறைக்கு சொன்ன அரை மணி நேரத்திற்குள் காவல் துறையும் வந்துள்ளது சாதிய ரௌடிகளும் வந்துள்ளனர். காவல் துறையின் முன்னிலையிலேயே தாக்குதலும் நடந்துள்ளது.

மீண்டும் சொல்கிறோம். நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்.சாதி மறுப்பு திருமணங்களுக்கு
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும்" என பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த சான்றிதழை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஐந்து வருட காதல்... சாதி மறுப்பு திருமணம்... கொந்தளித்த பெற்றோர்; நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.