ETV Bharat / state

கூட்டணி கட்சித் தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்!

Lok sabha elections CPI(M) Candidates: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற சி.பி.எம் வேட்பாளர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 7:42 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்களது பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கென்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கூட்டணியில் உள்ள மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து சி.பி.எம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் வாழ்த்துக்கள் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, இன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து, சி.பி.எம் வேட்பாளர்கள் இருவரும் வாழ்த்துக்கள் பெற்றனர். அதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் நேரில் சந்தித்து வேட்பாளர்கள் இருவரும் வாழ்த்து பெற்றனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த கட்ட நகர்வாக தேர்தல் பரப்புரை பணிகள் என்னென்ன, நிர்வாகிகளை எங்கெல்லாம் நியமிப்பது உள்ளிட்ட பணிகளைத் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: “ஏன் வேறு இடத்தை ஒதுக்கக்கூடாது?” - மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.