ETV Bharat / state

2024 மக்களவைத் தேர்தல்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையிலுள்ள முக்கிய திட்டங்கள் என்ன? - CPI election manifesto

CPI election manifesto: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டில் முக்கியமான பிரச்சினைகளில் தங்களது நிலைப்பாட்டை மக்கள் முன்பு வைப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய கம்மியூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 4:27 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் முக்கியமான பிரச்சனைகளில் தங்களின் நிலைப்பாட்டை மக்கள் முன்பு வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்திய விவசாயிகள் நிலையை மேம்படுத்த

  • விவசாயிகளின் டெல்லி முற்றுகையின்போது மோடி அரசு உறுதியளித்து, நிறைவேற்றத் தவறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுதல் மற்றும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்குதல்.
  • விரிவடைந்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, தேசிய கடன் நிவாரண ஆணையம் உருவாக்குதல், பேரிடர் நேரங்களில் துயருற்றவர்களுக்குக் காலம் தாழ்த்தாது முழு திறனுடன் நிவாரண பணிகளைச் செய்தல்
  • அனைத்து பயிர்களுக்கும் உள்ளடங்கிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குதல் காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்குதல்

இளைஞர்களும் வேலையின்மையும்

  • அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல் மற்றும் அனைவருக்குமான, பகத்சிங் தேசிய வேலை உறுதிச் சட்டம் (BNEGA) இயற்றுதல்.
  • அதிக தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தும் ஆலைகளை ஊக்குவித்து, அதன் மூலம் வேலையின்மையைக் குறைத்தல், அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களை நிரப்புதல் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய 'தேசிய இளைஞர் கொள்கை' உருவாக்குதல்.

பெண்களும், பாலின நீதியும்

  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த எல்லா வழக்குகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்கு வரும் வகையில் நீதிமன்றங்கள், விரைவு நீதி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல்.
  • ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான சீண்டல்களுக்கு எதிராகவும், கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராகவும் சட்டங்களைக் கடுமையாக்குதல்.
  • நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தாலும், செயல்படுத்தும் காலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இனியும் வேறு தடங்கல்கள் எழாமல், செயலுக்குக் கொண்டு வருதல்.

பழங்குடி, பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

  • காடுகளை உருவாக்குவதாகப் பொய் சொல்லி, பழங்குடி விவசாயிகளை அப்புறப்படுத்துவதைத் தடுத்தல். பஞ்சாயத்துச் சட்டம், வன உரிமைச் சட்டம் 2006, ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் அமலாக்குதல்.
  • பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முறையான இட ஒதுக்கீடு தனியார்த் துறை, அரசு தனியார் கூட்டு இணைப்பு (PPP model) உட்பட எல்லா பிரிவுகளிலும் உறுதி செய்தல்.
  • மனித கழிவுகளை மனிதன் அகற்றுவது எந்த வடிவத்தில் இருந்தாலும் முடிவுக்குக் கொண்டு வருதல். அவர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்துதல்.

சிறுபான்மை மக்கள்

  • நீதிபதி ராஜேந்தர் சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை அமலாக்குதல்.
  • தேசிய சிறுபான்மை ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்டத் தகுதி வழங்கப்படும்.
  • கும்பல் கூடி அடித்துப் படுகொலை செய்வதைத் தடுக்க, நிகழ் விட அரசு அதிகாரிகள், கிரிமினல் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பாக்கப்படும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவருதல்.
  • தலித்துகள் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் இட ஒதுக்கீடு நலன்களை வழங்குதல்.

பத்திரிகைச் சீர்திருத்தம்

  • பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள பத்திரிகைகள் மற்றும் பதிவுச் சட்டத்தின் பாதகமான அம்சங்களை நீக்குதல்
  • கண்ணியமான சம்பளமும், பணிப் பாதுகாப்பும் எல்லா பத்திரிகை நிறுவனங்களிலும் பணிபுரியும் எல்லா பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்கு வழங்கும் வகையில் பத்திரிகையாளர் சட்டத்தைத் திருத்துதல்.
  • அரசு ஒலிபரப்பு தொலைக்காட்சி நிலையங்களுக்குச் சுதந்திரம் அளித்தல். மின்னணு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்காத வகையிலும், அதே சமயம் பொய்யான தகவல்களைப் பரப்புவதை, உருவாக்குவதைத் தடை செய்யும் வகையிலும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, ஒரு சுயேச்சையான அமைப்பை உருவாக்குதல்.

இதையும் படிங்க: 'பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடி! உச்சக்கட்ட பயத்தில் மோடி' - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.