ETV Bharat / state

திருச்செந்தூரில் கோழிச் சண்டையில் பெண் கொலை.. 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை! - Tiruchendur Murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:48 PM IST

Updated : Jun 7, 2024, 8:11 PM IST

Tiruchendur Murder Case: திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி நீதிமன்றம்
தூத்துக்குடி நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு கோழி ஒன்று காணாமல் போனது சம்பந்தமாக யாரோ திருடி சென்று விட்டார்கள் என காணாமல் போன கோழியின் உரிமையாளரான திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி ஜெயா (40) தெருவில் நின்று சத்தம் போட்டுள்ளார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி (73), ஜெயா தன்னைத்தான் கோழி திருடியதாக சத்தம் போடுகிறார் என்று நினைத்து, இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், ஜெயாவை சாதி குறித்து அவதூறாகப் பேசி அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில், திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீசார், பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கை அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோபால் புலன் விசாரணை செய்து, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை பட்டியிலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி உதய வேலன், பாண்டி என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோபால் மற்றும் தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; கேசவ விநாயகத்திடம் அனுமதியின்றி விசாரணை நடத்த தடை! - Kesava Vinayagam

Last Updated : Jun 7, 2024, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.