திருப்பத்தூர்: திருப்பத்தூர் கவுன்சிலர் குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டார்.
அப்போது கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் குப்பைகள் அள்ள ஆட்கள் வருவதில்லை என்று குற்றச்சாட்டு வைத்த நிலையில், அப்போது பேசிய எம்.எல்.ஏ நல்லதம்பி அதிகாரிகள் உடைந்தையோடு தான் நிரந்தர பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் பணிக்கு வருவதில்லை என்று கூறுகிறார்கள் அது உண்மையா? என்று கேட்டு அப்படி விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் 34வது வார்டு கவுன்சிலர் சுகுணா ரமேஷ் எழுந்து நின்று எனக்கு ஓட்டு போட்ட மக்கள் நீ எல்லாம் ஒரு கவுன்சிலரா என்று கேட்கும் அளவிற்கு ஆளாகி உள்ளேன். நகராட்சி ஊழியர்கள் கடந்த 2 வருடங்களாக எந்த வேலையும் செய்வதே கிடையாது என்று குற்றம் சாட்டினார். இதனை கேட்ட அடுத்த நொடியே சம்மந்தப்பட்ட அலுவலரை அழைத்து அதை முடித்து விட்டு உள்ளே வாருங்கள் என்று கூறினார்.
பின்னர் நகராட்சி பகுதியில் பழுதான மின்மோட்டார்கள் எங்கே உள்ளது, அதனை யார் பயன்படுத்தி வருகிறார்கள் என்று பட்டியல் எடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க கூறினார். கூட்டத்தின் முடிவில், நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், அஜாண்டாவில் கோரியுள்ள அனைத்து பணிகளும் நடைபெறும் வகையில் நகராட்சி ஆணையர் செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை என்று கூறி கூட்டத்தை முடித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "திமுகவில் உள்ள சீனியர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டுவதற்கு மட்டும்தான்" - அண்ணாமலை விமர்சனம்! - Annamalai About Udhayanidhi