சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. சென்னையை பொருத்தவரையில் வடசென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்குப் பெட்டிகள் லயோலா கல்லூரியிலும் மத்திய சென்னை ,தென் சென்னை வாக்கு பெட்டிகள் அண்ணா பல்கலைகழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுவதால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்தடை ஏற்படாத வகையில் ஜெனரேட்டா் வசதி செய்யப்பட்டு 4 அடுக்கு காவலுடன் சிசிடிவி கேமரா உதவியுடன் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தினந்தோறும் காலை, மாலை வாக்கு எண்ணும் மையத்தில் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர்.
ராதாகிருஷ்ணன் ஆய்வு: இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையருமான ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மையங்களான ராணிமேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி வளாகத்திற்கு சென்று பாதுகாப்பு குறித்தும் சிசிடிவி கேமரா செயல்பாடுகள் குறித்தும் கட்டுபாட்டு அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தார்.
சோதனையின்போது சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்குகிறதா எனவும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சென 9 வது மண்டல அலுவலர் முருகதாஸ், மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் ,வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் உடனிருந்தனர்.