ETV Bharat / state

"நெல் கொள்முதல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்" - ராதாகிருஷ்ணன் உறுதி! - paddy buying station upgraded

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 9:34 PM IST

சீர்காழி அடுத்த நாங்கூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

கொள்முதல் நிலையங்களில் ராதாகிருஷ்ணன் ஆய்வு
கொள்முதல் நிலையங்களில் ராதாகிருஷ்ணன் ஆய்வு (Credits - Mayiladuthurai District Collector X Page)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கூட்டாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன். எருக்கூர் நவீன அரிசி ஆலையில் அமைந்துள்ள சைலோவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 130 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 124 நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 34,859 மெட்ரிக் டன்னுக்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 6,444 விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.70.09 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 34.46 மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.8,004 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் - ஈபிஎஸ் பெருமிதம்! - athikadavu avinashi plan launched

மேலும், அதிகப்படியான விவசாயம் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் தான் நடைபெறுகிறது. தற்போது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை விவசாயம் முடிவுற்ற நிலையில், கொள்முதல் நிலையங்களில் போதிய தார்பாய்கள் இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு வாங்கப்படுவதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்து, இதுபோல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தாலும், மழையால் பாதிக்கப்படுவதால் அதற்கு எவ்வாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கூடுதலாக பல்வேறு பகுதிகளில் நெல் பாதுகாப்பு குடோன் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.