ETV Bharat / state

பேரூராட்சி வார்டிலே வசதிகள் இல்லை.. மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு உறுப்பினரின் பதில் என்ன? - Aruvangadu People protest - ARUVANGADU PEOPLE PROTEST

Coonoor Aruvankadu People Protest: நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தராததாக பேரூராட்சித் தலைவரை கண்டித்து 13வது வார்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டம், சீதா
ஆர்ப்பாட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 9:49 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே உள்ளது ஜெகதளா பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 13வது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யவில்லை என்று பொதுமக்கள் இன்று மாதாந்திரக் கூட்டம் நடைபெறும் நேரத்தில், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து பேசிய அருவங்காடு கிராமவாசி சீதா, “தொடர்ந்து தமிழக அரசால் வழங்கப்படும் எந்தவித அடிப்படை வசதிகளும் எங்கள் பகுதிக்கு ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் செய்து தரவில்லை. பேரூராட்சி தலைவரின் சொந்த வார்டு இது என்றாலும், இங்கு ஒரு வசதியும் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது” என்றார்.

மேலும், அவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின் பேரூராட்சி அலுவலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து பணிகளையும் செய்து தருவதாக அலுவலர் ஒப்புதல் அளித்த நிலையில் பொதுமக்கள் அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், இது குறித்து ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் கூறுகையில், “எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்த வார்டில் வாக்களித்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறேன்.

ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சி, அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதேபோல் நாங்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்” எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றி திரிந்த ரஷ்யர்கள்; காவல் ஆய்வாளர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.