செங்கல்பட்டு : பிரபல பிரியாணி கடையின் உரிமையாளர் ஆர்.தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு சுவாச மனிதநேய அறக்கட்டளை அறிவுறுத்தலின் பேரில், நடிகர் கூல் சுரேஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகளுக்கு சுமார் 45 பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நடிகர் கூல் சுரேஷ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "நான் விளம்பரத்திற்காக இந்த வீடியோவை பதிவிடவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது, தகாத உறவு, திருட்டுத்தனம் போன்றவை சமூக வலைத்தளம் மூலம் வெளியே காட்டப்படுகிறது.
நான் வீடியோ வெளியிடுவதற்கு காரணம் கூல் சுரேஷ் உதவி செய்யும்போது பணம் வைத்திருப்பவர்கள் நாம் ஏன் உதவி செய்யக்கூடாது என்ற நோக்கம் வர வேண்டும் என்பதற்காக பதிவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : குடியிருப்பு அருகே கொடிய விஷப்பாம்புகள்.. லாவகமாக பிடித்த மீட்புப் படை வீரர்கள்! - snakes in Bodinayakanur Residency