ETV Bharat / state

திருச்சி மேயர் பதவி காங்கிரஸை விட்டு விலகியது எப்படி? செல்வப்பெருந்தகை கேள்வி! - Selvaperunthagai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 7:18 PM IST

Selvaperunthagai: ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜக தலைவர்கள் திணறுகிறார்கள் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, “மலைக்கோட்டையில் மனது வைத்தால் புனித ஜார்ஜ் கோட்டைக்கு போகலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ராகுல் காந்தி தலைமையில் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக திக்குமுக்காடுகிறது. அவர் சிந்தாந்த ரீதியாக மக்களுக்காக கேள்வி கேட்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பாஜகவினரால் பதில் கூற முடியவில்லை.

காந்திக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி தான் பாசிசத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். திருச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் இருந்தார். ஆனால், இன்று மேயர் பதவி நம்மிடம் இல்லை. ஏன் நாம் மேயர் பதவியை பெற முடியவில்லை? எங்கே தவறு இருக்கிறது? காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திலா அல்லது நமது தவறா? என காங்கிரசார் சிந்திக்க வேண்டும். எனவே, எல்லோரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி எங்கெங்கெல்லாம் நடைபயணம் மேற்கொண்டாரோ, அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அயோத்தி ராமரே ராகுல் பக்கம் தான் இருக்கிறார். கடவுள்கள் ஒருபோதும் ஏமாற்றுக்காரர்கள் பக்கம் இருக்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்படும்.

மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் அதை காங்கிரஸ் கட்சி கையில் எடுக்க வேண்டும். வருகிற அக்டோபர் 2ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து - சென்னைக்கும், நாகப்பட்டினத்திலிருந்து - நீலகிரி மாவட்டத்திற்கும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். அதில் ராகுல் காந்தி பங்கேற்பார்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வழக்கறிஞர்கள்.. எழும்பூர் கோர்ட் வளாகத்தில் களேபரம்! - Lawyers Clash in Egmore Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.