ETV Bharat / state

நடிகை ஷகிலா மீது தாக்குதல்! குடும்பப் பிரச்சினையில் விபரீதம்! போலீசார் விசாரணை! - நடிகை ஷகிலா

Actress shakila attacked by her daughter: நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் அடித்து கீழே தள்ளி அவதூறாக பேசியதாக அவர் அளித்த புகாரில் கோடம்பாக்கம் காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 12:00 PM IST

Updated : Jan 21, 2024, 5:10 PM IST

சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. தனது அண்ணன் இறந்துவிட்ட காரணத்தால், தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை ஆறு மாத கைக்குழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜன. 20) மாலை ஷகிலாவின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், அவரது சகோதரி ஜமீலா மற்றும் அவரது தாய் சசியுடன் சேர்ந்து ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு அவரது சொந்த வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷீத்தல் தன்னை தாக்கி விட்டதாக அவரது வழக்கறிஞரிடம் ஷகிலா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்து உள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்கறிஞர் சௌந்தர்யா இதுகுறித்து சமாதானம் செய்வதற்கு ஷகிலாவின் வீட்டிற்கு சென்று ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல் அவரது சகோதரி ஜமீலா மற்றும் சொந்த தாய் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த போதே ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், அங்கிருந்த பொருட்களை எடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் வழக்கறிஞர் சௌந்தர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வழக்கறிஞர் சௌந்தர்யா முதலுதவி சிகிச்சை பெற்ற பின்பு, ஷகிலா உடன் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையம் சென்று, இச்சம்பவம் குறித்து புகார் ஒன்றை அளித்து உள்ளார். இந்த புகார் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் ஷீத்தல் மற்றும் அவரது சகோதரி, தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாலாஜாபேட்டையில் காணாமல் போன 4ஆம் வகுப்பு மாணவன்; போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Last Updated : Jan 21, 2024, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.