ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் கதம்ப விழா!- மதுரையில் மாற்றத்திற்கான முழக்கம்..! - MADURAI DIVYANG COMPETITION - MADURAI DIVYANG COMPETITION

MADURAI DIFFERENTLY ABLED COMPETITION: மதுரையில் GMS அறக்கட்டளை சார்பாக மாற்றுதிறனாளிகளுக்கென கதம்ப விழா என்னும் ஒருங்கிணைப்பு கலைத்திறன் போட்டி வரும் ஜூன் 29 மற்றும் 30ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ராஜகுமாரி ஜீவகன் பேட்டி
ராஜகுமாரி ஜீவகன் பேட்டி (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 10:32 PM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 'கதம்ப விழா’ என்னும் கலைத்திறன் போட்டிகள் அடங்கிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெறுகிறது.

விழாவின் நோக்கம்: இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மாற்றுத்திறனாளிகள் மீது காட்ட வேண்டிய பொறுப்புணர்வும், அக்கறையும் போற்றும் வகையிலும், மாற்றுதிறனாளிகள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என்றனர். சமூக பொது பார்வையில் அவர்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கான மேடையை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடையில்லை என அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விழாவாக இந்த நிகழ்ச்சி வைக்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் தனித்திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்கள் ஆக்க வேண்டும்.

விழா ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரி ஜீவகன் பேட்டி (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu)

ஒருங்கிணைக்கும் கதம்ப விழா: இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரி ஜீவகன் கூறுகையில், ”கதம்ப விழா என்ற பெயரில், ’அன்பையும் நல்லிணக்கத்தையும் விதைப்போம், போதை கலாச்சாரத்தை வேரறுப்போம்’. எனும் முழக்கத்தை முன்வைத்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆட்டிஸம், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர், செவித்திறன் குறைபாடுடையோர், பார்வை மாற்றுத்திறனாளிகள், கை கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் ஆகியோரை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நிகழ்ச்சி நம்பிக்கை தரகூடிய நிகழ்வாக அமையும்” என்றார்.

போட்டிக்கான கலம்: போட்டியில் பங்கேற்கும் அனைவரும் இரண்டு பிரிவுகளாக (வயது வரம்பு 13 முதல் 19 வயதினர், மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோர்) கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் இசைத்தல், கேரம், சதுரங்கம், சிறுகதை கூறுதல், புகைப்படம் எடுத்தல், காமெடி செய்தல், குறும்படம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதகளும் வழங்கப்பட இருக்கிறது.இந்த போட்டியில் பங்கேற்க வருகை தருகின்ற அனைவருக்கும் தங்குமிட வசதி உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த போட்டியில் பங்கேற்க வருகை தருகின்ற அனைவருக்கும் தங்குமிட வசதி உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுதிறனாளிகளும் சாதனைகளும்: மேலும் இந்த விழாவின் சிறப்பு அம்சமாக பத்து சிறந்த மாற்றுதிறனாளி தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வரும் இவ்விழாவானது, இந்த வருடமும் சுமார் 500 போட்டியாளர்களுடன் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தவித அனுமதி கட்டணமும் கிடையாது. தற்போது இணைய வழியாக பதிவுகள் நடைபெற்று வருகின்றது.

இதையும் படிங்க: 2,327 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ அறிவிப்பு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.