ETV Bharat / state

தருமபுரியில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிப்பு தொடக்கம்! - lok sabha election 2024

LOK SABHA ELECTION 2024: நாடாளுமன்றத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என வாக்கு செலுத்த முடியாதவர்களின் வீட்டிற்கே சென்று வாக்கு செலுத்தும் முறையை நடைமுறைக்குத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள நிலையில், தர்மபுரியில் வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று நேரடியாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

தருமபுரி
தருமபுரி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 4:22 PM IST

தருமபுரியில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிப்பு தொடக்கம்!

தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் வாக்குப்பதிவு செய்வதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்மரமாகச் செய்து வருகிறது.

85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக நேரடியாக வீட்டிற்கே சென்று தபால் மூலம் வாக்கு செலுத்தும் முறையை இந்த தேர்தலிலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறைக்குக் கொண்டு வந்து உள்ளது. அதற்கான பணிகள் தேர்தல் அறிவித்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 04) தமிழகம் முழுவதும் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாகத் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளகம்பட்டி வாக்குச்சாவடியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்கு செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

இதில், தபால் வாக்கு செலுத்துவதற்கான மண்டல அலுவலர் ரமேஷ் தலைமையில் நுண் பார்வையாளர் விஜய், காவலர் கோகுல கண்ணன், கிராம உதவியாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வயதானவர்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று தபால் வாக்கு செலுத்தும் முறையை விவரித்து அவர்களிடம் தபால் வாக்குப் பதிவு செய்தனர்.

மேலும், தபால் வாக்கு செலுத்தும் முறை குறித்தும் வயதானவர்கள், முடியாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களது உறவினர்கள் மூலம் அந்த வாக்கு செலுத்துவதற்கு அறிவுரைகள் வழங்கி, தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முயற்சியால் முதன்முறையாகப் படிக்காதவர்களும், வயதானவர்களும் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல், தபால் மூலமாக தங்களது வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாதக கட்சி சின்னம் முதல் பாமக-பாஜக கூட்டணி வரை சீமானுடன் சிறப்பு நேர்காணல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.