ETV Bharat / state

கோவையில் திறக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா! ஆர்வமுடன் குவியும் பார்வையாளர்கள் - Coimbatore butterfly park Opens

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 8:17 PM IST

Coimbatore Butterfly Park Opens: கோவை வெள்ளலூர் குளக்கரையில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தனியார் பங்களிப்புடன் பட்டாம்பூச்சி பூங்கா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

கோவை பட்டாம்பூச்சி பூங்கா
கோவை பட்டாம்பூச்சி பூங்கா (Credits- ETV Bharat TamilNadu)

கோயம்புத்தூர்: கோவை வெள்ளலூர் குளக்கரையை ஒட்டி பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் 103 வகையான பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள 31 விழுக்காடு பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

கோவையில் திறக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த பூங்காவில் 18 அடி உயர பட்டாம்பூச்சி வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு பட்டாம்பூச்சிகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மைக்காக செய்த பல்வேறு குறிப்புகளும், ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு, நீர் மேலாண்மை திட்டம் வகுத்த மன்னர், வீர ராஜேந்திரன் பற்றிய குறிப்பு, பாரதியார் கவிதை, திருவள்ளுவரின் திருக்குறள், சோழ மன்னர் முதலாம் ராஜராஜன், வேந்தன் பாரி ஆகியோர் நீர் மேலாண்மைக்காகவும், விவசாயம், விவசாயிகளுக்கு சென்ற செயல்கள் குறிப்புகளாகவும், ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

அதேபோல் இங்கு தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டு, மேற்தொடர்ச்சி மலை பற்றிய குறிப்புகள், பட்டாம்பூச்சிகள் பற்றி சுவாரசிய தகவல்களையும், பட்டாம்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி முறை பற்றியும், எழுதப்படுள்ளனர். மேலும் நடைபாதையில் இரு புறங்களிலும் பல்வேறு வகையான பட்டாம்பூச்சி ஓவியங்கள் புகைப்படங்கள், அதன் அறிவியல் பெயர் குறிப்பிடப்படுள்ளன.

இந்த பூங்காவை அனுமதி இலவசமாகும். இங்கு வரும் பொதுமக்கள் சத்தம் எழுப்பாமல் எதையும் தொடாமல் பூங்காவை பார்வையிட வேண்டும், என்பதே குளங்கள் அமைப்பினர் வேண்டுகோளாகும். கோவையில் எத்தனையோ பூங்காக்கள் இருந்தாலும், இந்த திறந்தவெளி பட்டாம்பூச்சி பூங்கா, அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மதுரையில் வேகமெடுக்கும் டைடல் பார்க் பணிகள்.. வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.