ETV Bharat / state

கோவை அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து.. போலீசார் விசாரணை! - Spinning Mill Fire Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 10:56 PM IST

Spinning Mill Fire Accident: கோவை மாவட்டம், அன்னூர் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spinning Mill Fire Accident
Spinning Mill Fire Accident

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்குச் சொந்தமான, துண்டு தயாரிக்கும் தனியார் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (மார்ச் 31) மாலை நூற்பாலை குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே, காற்றின் வேகத்தால் தீ மளமளவென நூற்பாலை முழுவதும் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையாகின.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது. தகவலின் பெயரில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால், நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாத விதமாக தவிர்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பரபரப்பான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.