ETV Bharat / state

“பேரறிவாளன் தாய் போல சவுக்கு சங்கர் தாயாரும் சட்டப் போராட்டம் நடத்துகிறார்”.. கோவையில் வழக்கறிஞர் கூறியது என்ன? - Savukku Shankar in Coimbatore Court - SAVUKKU SHANKAR IN COIMBATORE COURT

Savukku Shankar's lawyer Gopalakrishnan: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளை போல, சவுக்கு சங்கரின் தாயார் கமலா தற்போது சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர்
சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 5:49 PM IST

கோயம்புத்தூர்: கடந்த மே 15ஆம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாகப் பேசியதாக, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி, ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை குற்றவியல் கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். அதனை அடுத்து, சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, கோவை ஜே.எம் 3 நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், "என்னைப் பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக கூறியபடிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், "சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில், பொது அமைதிக்கு எந்த குந்தகமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது.

மேலும், சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக கைது காண்பிக்க ஆரம்பித்தார்கள். ஜாமீனில் சென்றவரை திரும்ப கைது செய்யவதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. அதை அனைத்தையும் அவர்கள் பின்பற்றவில்லை.

காவல்துறைக்கு புரியும் படியான பாஷையில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் பதில் கூறும். பேரறிவாளன் தாய் அற்புதம்மாளை போல தற்போது கமலா அம்மா சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். திரும்பவும் இந்த அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் ஒரு விஷயத்தை கூறுகிறோம்.

நீங்கள் போடும் வழக்கு தூக்கு தண்டனை பெரும் வழக்கல்ல. ஐந்து வருடம் தண்டனை கிடைத்தாலும் திரும்பவும் வந்து சங்கர் பேசத்தானே போகிறார். அப்போது என்ன கொன்று விடுவார்களா? எத்தனை நாட்கள் உள்ளே வைத்திருக்க முடியும்? சங்கரை மிரட்டலாம் என நினைத்தால் அது நடக்காது. எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அவர் பேசுவார்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னையில் நிதி நிறுவன மோசடி; பாஜக ஆதரவாளர் தேவநாதன் யாதவ் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.