ETV Bharat / state

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - கோவை கோர்ட் உத்தரவு..! - youtuber felix gerald

Felix Gerald: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Felix Gerald arrivals in Covai District Court
ஃபெலிக்ஸ் ஜெரால்டு நீதிமன்றம் அழைத்து வரப்பட்டபோது எடுத்த புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:23 PM IST

கோவை: தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார்.

அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சவுக்கு சங்கர் தற்போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை பெண் காவலர்கள் பாதுகாப்புடன் இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-ல் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நீதிபதி வி.எல் சந்தோஷ், ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பெண் காவலர்கள் பாதுகாப்புடன் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.