ETV Bharat / state

"பிரதமர் 8 முறை வந்தும் முடியாததை ராகுல் ஒரே ஸ்வீட் பாக்சில் முடித்துவிட்டார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - DMK Mupperum Vizha - DMK MUPPERUM VIZHA

8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைக்க முயன்ற பிம்பத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் தந்து முறியடித்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற திமுக மும்பெரும் விழா மாநாட்டு மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Etv Bharat
Tamil Nadu CM MK Stalin (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 9:50 PM IST

Updated : Jun 15, 2024, 10:14 PM IST

கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினின் உரை (ETV Bharat)

கோவை: 18வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதை கொண்டாடடும் வகையில், முப்பெரும் விழா நடத்த திமுகவினர் முடிவு செய்தனர்.

அதன்படி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன்.15) மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இது தவிர, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்க கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக வேன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு, அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.

தொடர்ந்து மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர், "கோவைக்கு கடந்த முறை வந்ததை நினைத்து பார்க்கிறேன். தேர்தல் பரப்புரைக்காக வந்த போது எவ்வளவு சிறப்பாக கூட்டம் நடைபெற்றதோ அதைவிட சிறப்பான வெற்றி கூட்டமாக இருக்கின்றது.

8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரதமர் மோடி கட்டமைக்க முயன்ற பிம்பத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் மூலம் முறியடித்து விட்டார். ராகுல் காந்தி கொடுத்த ஒரே ஒரு இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்பை பொய்யாக்கியது. நாற்பதும் நமதே என்பதை நடக்க விடுவார்களா என பலரும் பேசினார்கள். நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவுகளை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரத்தத்தை வியர்வையாக சிந்தி இந்தியா கூட்டணி வெற்றிக்காக பணி செய்த தோழர்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றேன். இது மேடையில் இருக்கும் அனைவருக்குமான பாராட்டு விழா.

பாராட்டுகளை மாலைகளாக கோர்த்து தொண்டர்களான, தோழர்களான உங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன். 2004ல் திமுக கூட்டணி வெற்றிக்கு பின்பு ஜெயலலிதா அம்மையார் மக்கள் விரோத நடவடிக்கையில் இருந்து பின் வாங்கினார். இப்போதும் பாஜகவின் 400 இடங்களை கைபற்றுவோம் என்பதை உடைத்து இருக்கின்றோம்.

பாஜகவால் தனித்து அரசியல் செய்ய முடியாது. சட்ட புத்தகத்திற்கு முன்பு தலை குனிந்து இருக்க வைத்திருக்கின்றோம். இது 41வது வெற்றி திராவிட மாடல் அரசு மேல் மக்களுக்கு இருக்கும் திருப்தியில் கிடைத்த வெற்றி இது. கொள்கை உறவுடன் தொடரும் கூட்டணி தான் வெற்றிக்கு காரணம்.

2023 பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது என அறிவித்தேன். இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். இது பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துற போன்றவற்றை வைத்து இந்தியா கூட்டணி கட்சிகளை மிரட்டினார்கள்.

விதிகளை மீறி மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி பிரசாரம் மேற்கொண்டனர். ஏராளமான பொய் , போலி செய்திகளை பரப்பினர். இவ்வளவு செய்தும் 240 தொகுதிகள் தான் கிடைத்தது. இது மோடிக்கான வெற்றியல்ல. அவருடைய தோல்வி. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரால் தான் மோடி பிரதமரகி இருக்கின்றார்.

230 உறுப்பினர்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கின்றனர். அதிமேதாவிகள் கேட்கின்றனர், 40 இடங்களில் வெற்றி பெற்று என்ன செய்ய போகின்றனர் என, நாட்டு மக்களை இழிவு படுத்துகின்றனர். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை, எங்கள் எம்.பிகள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தை சுடுவார்கள், Wait & see...

நாடாளுமன்றத்தில் 9,695 கேள்வி ,1,949 விவாதங்கள், 59 தனி நபர் மசோதா கொண்டு வந்து இருக்கின்றனர். ஓட்டுமொத்த பாஜக தலைவர்களும் திமுகவை எதிர்த்து தான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கின்றனர். இப்போது மைனாரிட்டி பாஜக எதிராக, மக்களின் வலுவாக எம்.பிகளின் குரல் ஒலிக்க போகின்றது.

சமூக நீதிக்காக இந்திய நடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இந்தியா கூட்டணி அரசியல் செய்யும். அண்ணா, ஈவிகேஎஸ் சம்பத், நாஞ்சிலார், முரசொலி மாறன் போன்றவர்கள் பேசியதை போல நாடாளுமன்ற உரைகள் அமைய வேண்டும் மேடையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடமைகளுக்காக, உரக்க பேசுங்க, பலவீனமான பாஜக அரசு, பாசிச பாதையில் போகாமல் தடுங்கள்.

வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்கும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சிப்பதை தடுத்து, காவல் அரணாக 40 எம்.பிகளும் இருப்பார்கள். எப்பவும் எந்த சூழலில் கழகத்தின் வெற்றி பற்றி யோசித்தவர் கலைஞர். 24 அமாவாசை இருக்கு என சொல்லிட்டு இருந்தார் எடப்பாடியார்.

சட்டமன்ற தேர்தல் வரட்டும் அதிமுகவிடம் இருக்கிற இடத்தையும் புடுங்கிடுவோம். 234 சட்டமன்ற வாரியாக வாக்கு எண்ணிக்கையை பார்த்தால், அதில் 221 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து இருக்கின்றது. விக்கிரவாண்டி தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார். தொடர் வெற்றி நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் கொடுத்து இருக்கின்றது.

உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பொறுப்புகளை கொடுத்து இருக்கீங்க, இது நிச்சயம் வீண் போகாது. நன்றியுணர்வுடன் எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக அறிவிப்பு! - Vikravandi Bye Election ADMK

Last Updated : Jun 15, 2024, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.